Monday, March 3, 2014

"வாரன் பப்பட்" (Warren Buffet ) பற்றி சில சுவாராசியமான தகவல்கள
உலகின் இரண்டாவது பெரிய பணக்கார மனிதரான "வாரன் பப்பட்" (Warren Buffet ) பற்றி சில சுவாராசியமான தகவல்கள
1. அவர் முதல் பங்கு (share) வாங்கியது அவரின் 11 வயதில்.... அதுவே தான் தாமதமாக வாங்கியதாக பிற்காலத்தில் அவர் தெரிவித்தார்....
2. 14 வயதிலேயே தனது சுய சம்பாத்தியத்தில் சின்ன பண்ணை வீடு ஒன்றினை அவர் வாங்கினார்.....அப்பணம் அவர் பேப்பர் டெலிவரி செய்ததில் சம்பாதித்து, சேமித்த பணம்
3. இன்று வரை 3 படுக்கை அறை கொண்ட சாதாரண வீட்டிலேயே அவர் குடியிருந்து வருகின்றார்..அவ்வீட்டிற்கு சுற்றுச் சுவரோ அல்லது வேலியோ இல்லை
4. அவராகவே அவர் காரை எங்கும் ஓட்டிச் செல்வார்.... டிரைவர் மற்றும் பாதுகாப்புக்கென ஆட்கள் யாரும் கிடையாது
5. அவர் இதுவரை எங்கும் தனி விமானத்தில் பயணித்தது கிடையாது. .. உலகின் பெயர்பெற்ற, பெரிய‌ விமான கம்பெனிக்கு சொந்தக்காரர் அவர்...
.6. அவரின் சொந்த கம்பெனிகள் மொத்தம் 63. வருடம் ஒரு முறை மட்டுமே கம்பெனியின் தலைமை பொறுப்பாளர்க்கு ( CEO) கடிதம் எழுதுவார்.... இடைப்பட்ட எந்தவொரு மீட்டிங் மற்றும் சந்திப்புகளும் இருக்காது.... அந்த கடிதத்தில் கம்பெனியின் அடுத்த இலக்கை குறிப்பிட்டு இருப்பார்.....
7. கம்பெனி பொறுப்பாளர்க்குஇரண்டு விதிகளை மட்டும் குறிப்பிடுவார் ..... அது(அ) பங்குதாரர்களின் பணத்தை நஷ்டமடைய செய்யக் கூடாது(ஆ) முதலாவது விதியை மறக்க கூடாது
8.அவரைச் சுற்றி எப்போதும் ஒரு உயர்தர சமூகத்தினரின் கூட்டம் இருக்காது....அவரின் ஓய்வு நேரத்தில் அவர்க்குத் தேவையான பாப் கார்னை வீட்டில அவரே தயார் செய்து சாப்பிடுவார், டிவி பார்ப்பார்....
9. அவரிடம் எந்தவொரு செல் போனோ அல்லது மடிக் கண்ணியோ வைத்திருக்க மாட்டார்...
.10. உலகின் முதல் பணக்காரரரான பில் கேட்ஸ் சில வருடங்களுக்கு முன் இவரை சந்திக்க‌ , இருவருக்கும் பொதுவான எதுவும் இல்லையென்று எண்ணி முதலி வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே வாரன் பப்பட் டை சந்திக்கநேரம் ஒதுக்கியிருந்தார்... ஆனால் சந்தித்த பொழுது, அந்த சந்திப்பு பத்து மணி நேரங்களுக்கும் மேலாக நடைப்பெற்றதுஎளிமையின் மனிதரான வாரன் பப்பட் நமக்கு சில அறிவுரைகளைச் சொல்கின்றார்....... அவை :
1. பணம் மனிதனை படைக்கவில்லை ஆனால் பணத்தை படைப்பவனை மதிக்கின்றது
2. உங்கள் வாழ்க்கையினை எளிமையாகவும், எளிதாகவும் வாழுங்கள்
3. அடுத்தவர்கள் சொல்வதை செய்யாதீர்கள். மற்றவர்கள் சொல்வதை கேளுங்கள் ஆனால் உங்களுக்கு சரியெனப் படுவதை நீங்கள் செய்யுங்கள்
4. புகழ்பெற்ற கம்பெனியினை (brand names) பின்பற்றாதீர். உங்களுக்கு வசதியானதை வாங்கி பயன்படுத்துங்கள்......
5. பணத்தை தேவையற்ற காரியங்களை வாங்கி வீணாக்காதீர்
6. உனது வாழ்க்கை....நீயே விதிகளை தீர்மாணி, அடுத்தவரை உன் வாழ்க்கையினை தீர்மானிக்க அனுமதிக்காதே......

தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்..

1 நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள்.

2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று.

3. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள்.

4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை.

5. உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது.

6. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்.

7. அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்.

8. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை, நிராகரித்த்வருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

# மாற்றத்தை வெளியில் தேடாமல் உங்களுக்குள் தேடினால், தாழ்வு மனப்பான்மையை எளிதில் போக்கி விடலாம்

Wednesday, February 19, 2014

கனவுகள் நிஜமாகட்டும்!

கனவுகள் நிஜமாகட்டும்!

1. ஒழுக்கமான மனம்: அறிவியல், கலை மற்றும் வரலாறு என்று பல்வேறு துறைகளில் சிந்தனைகளை வளர்க்கக்கூடிய மனம். இவற்றில் ஏதாவது ஒன்றில் நாம் மிகச்சிறந்து விளங்க வேண்டும்.

2. ஒருங்கிணைக்கும் மனம்: பல்வேறு துறைகளில் உள்ள அறிவுகளை ஒருங்கிணைத்து சிந்திக்கும் மனம் கொண்டவர்களாக நாம் இருக்க வேண்டும். இதை மற்றவர்களுக்கும் தகவல்தொடர்பு மூலம் எடுத்துரைக்க வேண்டும்.

3. கற்பனை மனம்: புதிய பிரச்னைகளுக்கும் கேள்விகளுக்கும் கருத்துக்களுக்கும் தீர்வு சொல்ல வேண்டும்.

4. மரியாதைக்குரிய மனம்: மனிதர்களுக்குள் உள்ள வேறுபாட்டுத் தன்மையை புரிந்து விழிப்புணர்வு பெறுதல்.

5. அறவழியிலான மனம்: குடிமகனாகவும் பணியாளராகவும் ஒவ்வொருவரும் பொறுப்புணர்வை நிறைவேற்றுதல்.

இந்த குணாதிசயங்களை பெறுவதற்குயாரும் பாடத்திட்டத்தையோ அல்லது படிப்பையோ மாற்ற வேண்டியதில்லை. கல்வி நிறுவனத்தின்
நோக்கமும், ஆசிரியரின் நடத்தையும் சரியாக இருந்தாலே போதுமானது.

வெற்றியின் ரகசியம்:


வெற்றியின் ரகசியத்தை அறிந்து கொள்வதற்கு முன், உங்களின் உள் மனதை அறிந்து கொள்வது மிகவும் அவசியம். உங்களைப் பொறுத்தவரையில்,

"வாழ்க்கையில் வெற்றி என்பதற்கு என்ன அர்த்தம்?
யார் வெற்றி பெற்றதாக நீங்கள் கருதுகிறீர்கள்?'
என்ற கேள்விகளுக்கு, தெளிவான பதில் இருக்க வேண்டும்.

நீங்கள் வெற்றி பெறுவதற்கு தேவை,
கல்வியா, பணமா, பதவியா, புகழா, அந்தஸ்தா,
மகிழ்ச்சியான உறவா அல்லது எல்லாம் கலந்த கலவையா?
எல்லாம் தேவையென்றால் எது எந்த அளவுக்கு முக்கியம்?
இதில் குழப்பம் என்றால் உங்களைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளுங்கள்.

"உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்...'

என்ற திரைப்படப் பாடலைக் கேட்டிருப்பீர்கள். வெற்றிப் பாதையில் நாம் கடக்க வேண்டிய முதற்படி, நம்மை நாமே புரிந்து கொள்வது. ஏனென்றால், நம்மைப் பற்றி, நம் மனதில் வரைந்து வைத்துள்ள சுயசித்திரம்தான், ஒரு நாள் நிஜமாக போகிறது.

மனித மனம், ஒரு நிலையில் இல்லாத குரங்கு போன்றது. அதை ஒரு நிலைப்படுத்தி, "நாம் எப்படிப்பட்ட மனிதர்? நம் வாழ்க்கையில் என்னவெல்லாம் சாதிக்க வேண்டும்?' என்ற கேள்விகளுக்கு நம்மிடத்தில் தெளிவான பதில் இருக்க வேண்டும்.

நம்மைப் பற்றி புரிந்து கொள்வதற்கு அடிப்படைத் தேவை, நாம், நம்மை முழுமையாக நேசிக்க வேண்டும்;
முதலில் நமக்கு நாம் உண்மையாக இருக்க வேண்டும்.

அடிப்படை குணங்கள், விருப்பு, வெறுப்பு, எதிர்பார்ப்புகள், தேவைகள்
பற்றிய தெளிவு இருக்க வேண்டும். நம் வாழ்க்கை லட்சியம் என்ன,

அதை அடைய எதை இழக்கத் தயாராக இருக்கிறோம்
என்ற கேள்விகளுக்கு, நம்மிடத்தில் பதில் தயாராக இருக்க வேண்டும்.

மனதை ஒரு நிலைப்படுத்த, ஒரு அமைதியான இடத்தில் நம்மைத் தனிமைப்படுத்தி, கண்களை மூடி மெதுவாகவும், சீராகவும் நீண்ட மூச்சை எடுத்து, உடலையும், மனதையும் தளர்த்திக் கொள்ள வேண்டும்.

கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், இறைவனை வழிபடலாம் அல்லது தியானம் செய்யலாம். பின், கீழ்க்கண்ட கேள்விகளுக்கு நம் அடிமனதிலிருந்து வரும் உண்மையான பதிலை, மனதில் பதிவு செய்ய வேண்டும்.

* நான் அடிப்படையில் எப்படிப்பட்ட மனிதர்?
* எது நிரந்தர மகிழ்ச்சியையும், துக்கத்தையும் கொடுக்கும்?

* மிகவும் பிடித்தது மற்றும் பிடிக்காதது என்ன?
* வாழ்க்கையில் வெற்றியடைய என்னவெல்லாம் சாதிக்க வேண்டும்?

* என்னைப் பற்றி மற்றவர்கள் என்ன அபிப்ராயம் வைத்திருக்க வேண்டும்?
* என்னுடைய பலம் எது, பலவீனம் எது?

* என்னுடைய முன்மாதிரி மனிதர்கள் யார்; எதனால்?
* வருங்காலத்தில் யாரைப் போல் ஆக வேண்டுமென்று விரும்புகிறேன்?

மேற்கண்ட கேள்விகளுக்கு பதில்களை ஆராய்ந்து பார்த்து, முரண்பாடான விஷயங்களையும், நடைமுறைக்கு ஒத்து வராத யோசனைகளையும், தவிர்த்து விடவேண்டும்.

அதையே எழுதி வைத்தால், நம்மைப் பற்றியும், நாம் சாதிக்க நினைப்பதைப் பற்றியும், அதற்காக செய்ய வேண்டிய தியாகத்தைப் பற்றியும், தெளிவும், மன வலிமையும் கிடைக்கும். இப்படி எழுதி வைத்ததைப் பத்திரப்படுத்தி வைத்தால், வாழ்க்கையில் குழப்பம், சலிப்பு மற்றும் சோர்வு ஏற்படும் போது அதை எடுத்துப் படித்தால், நிச்சயமாக புத்துணர்வு கிடைக்கும்; மன உறுதியும், தெளிவும் பிறக்கும்.

வாழ்க்கையில் என்ன வேண்டுமென்பதில் தெளிவு இருந்தால் மட்டும் போதாது, என்ன தேவையில்லை என்பதிலும் தெளிவு வேண்டும். சிலருக்கு, வருடா வருடம் வாழ்க்கையின் லட்சியங்கள் மாறிக் கொண்டேயிருக்கும். இதற்கு முக்கியக் காரணம், இவர்களுக்கு எந்த லட்சியத்திலும் தீவிரமான பற்று இருப்பதில்லை. மேலும், வெற்றியடைந்த யாரைப் பார்த்தாலும், அவர்களைப் போல வர வேண்டும் என்று, திடீர் ஆர்வம் காட்டுவர்.

குறிக்கோளை நிர்ணயம் செய்யுமுன், நம்மை நம்பியுள்ள குடும்பத்தினரைக் கலந்து ஆலோசிப்பது அவசியம். அவர்களுடைய ஆதரவு இல்லாதபோது, நம்முடைய லட்சியப் பாதையில் சறுக்கல் வரலாம். தேவைப்பட்டால் நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்களிடத்தில் கருத்து கேட்கலாம்.

ஒவ்வொரு நிகழ்வும், இந்த உலகத்தில் இருமுறை நிகழ்வதாகக் கூறுகின்றனர். ஒன்று மனத்திரையில்; இன்னொன்று நிஜத்தில். அதனால், ஒவ்வொரு நாளும் நம் அன்றாட வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன், நாம் என்னவாக வேண்டும் என்பதை மனத்திரையில், பதிவு செய்ய வேண்டும்.

நாம் எந்த நிலையை அடைய வேண்டுமென்று, மனதில் ஆழமாகப் பதிவு செய்கிறோமோ, அந்த நிலையை விரைவில் அடைவது உறுதி.

ஏராளமான வாய்ப்புகள்ஒரு மேடைபேச்சாளர் தன்னுடைய சட்டைபையிலிருந்து ஒரு 500 ரூபாயா தாளை எடுத்து இது என்ன என பார்வையாளர்களை பார்த்து கேட்டார் அனைவரும் இது ஒரு 500 ரூபாய் தாள் என கூறினார்கள் பின்னர் அதனை தரையில் கசக்கி வீசிஎறிந்தபின் அதுஎன்ன என கேட்டார் அப்போதும் அனைவரும் இது ஒரு 500 ரூபாய் தாள் என கூறினார்கள் பிறகு அதன்மீது ஒரு முத்திரையை குத்தி இப்போது இது என்னவென கேட்டார் இப்போதும் அனைவரும் இது ஒரு 500 ரூபாய் தாள் என கூறினார்கள் உடன் அம்மேட பேச்சாளர் பார்த்தீர்களா ஒரு 500 ரூபாய்தாளானது நாம் என்ன செய்தாலும் அது தன்னுடைய மதிப்பை மாற்றிகொள்ளாமல் தக்கவைத்து கொண்டுள்ளது அவ்வாறே நாம் அனைவரும் நம்முடைய குணத்தை திறனை எந்த இக்கட்டு வந்தாலும் எந்த சூழலிலும் மாற்றிகொள்ளாமல் நம்முடைய அவரவர்களின் தனித்தன்மையை பராமரிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்

பின்னர் இந்த 500 ரூபாய் யாருக்கு வேண்டும் என கேட்டார் உடன் அனைவரும் எனக்கு எனக்கு என தத்தமது கைகளை உயர்த்தினார் ஆயினும் ஒரு இளம் வாலிபன் தடதடவென மேடைக்கு ஓடிவந்து அந்த 500 ரூபாய் தாள் தனக்கு வேண்டுமென தன்னுடைய கையை நீட்டி பறித்து கொண்டார் உடன் அம்மேடை பேச்சாளர் பார்த்தீர்களா நம் அனைவருமே அந்த 500 ரூபாய் தாளை விரும்புகின்றோம் ஆனால் இந்த இவ்வளவு பெரிய கூட்டத்தில் ஒரேஒருவர் மட்டும் அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டார் ஆம் நம்மை சுற்றி ஏராளமான வாய்ப்புகள் உள்ளன அவைகளை ஒருசிலர் மட்டுமே பயன்படுத்திகொண்டு தம்முடைய வாழ்வை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்கின்றனர் மற்றவர்கள் அந்த வாய்ப்பு நம் கையில் தானாக வந்த விழும் அதன்பின் நாம் பயன்படுத்தி கொள்வோம் என சோம்பேறியாக இருக்கின்றோம் என்பதே உண்மை நிலவரமாகும்

வெற்றியாளர் ஆவதற்கான செயல்திட்டப் படிநிலைகள்:

1. எல்லாவற்றிலும் உள்ள நல்லதையே பாருங்கள்

2. இப்பொழுதே எதையும் செய்து விடுகிற பழக்கத்தைக் கொண்டிருங்கள்

3. நன்றி மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்

4. உண்மையான கல்வியைப் பெறுங்கள்

5. உங்களுக்கென்று ஒரு உயர்ந்த சுயமதிப்பினை வளர்த்துக் கொள்ளுங்கள்

6. தீயப் பழக்கத்திலிருந்து விலகி இருங்கள்

7. அவசியம் செய்ய வேண்டிய காரியங்களை விரும்பக் கற்றுக்கொள்ளுங்கள்

8. நல்ல எண்ணங்களுடன் உங்களது நாளைத் தொடங்குங்கள்

ஆளுமை

ஆளுமை என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் personality என்றுதான் சொல்கிறார்கள். அது சரியான வார்த்தைதான். ஆனால், personality என்பதை பெரும்பாலானவர்களிடம் கேட்டுப் பாருங்கள். அவர்களிடமிருந்து கிடைக்கும் பதில் வேறொன்றாக இருக்கும்.

ஆளுமை என்பது ஒருவரை மற்றவர்களிடமிருந்து பிரித்துக் காட்டக்கூடியது.

ஒருவன் தனது தனித்தன்மை வாய்ந்த நடத்தையால் தன்னை சூழ்நிலைக்கு ஏற்ப அமைத்துக் கொள்தே ஆளுமை எனப்படுகிறது.

இந்த ஆளுமையைப் பற்றி உளவியல் வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

ஒருவனுடைய நுண்ணறிவு, சுபாவம், திறமை மற்றும் எண்ணங்கள் ஆகியவற்றின் நிலையே ஆளுமையாகும்.
- Warren

ஒரு தனி மனிதனின் தனித்தன்மையான நடத்தையினையும் சிந்தனையையும் முடிவு செய்கின்ற அவனுடைய உள, உடல் அமைப்பே ஆளுமை எனப்படுகிறது.
- Alfred

ஒரு தனிமனிதனுக்குரிய உள செயல்பாடுகளும் உளநிலைகளும் கொண்ட மொத்த அமைப்பே ஆளுமை.
- Lindon

சரி, இவர்களுக்கெல்லாம் முன் வந்த உளவியலின் தந்தை என்று போற்றப்படக்கூடிய ·பிராய்டு சொன்னதைப் பார்ப்போம்.

·பிராய்டு மனதை மூன்று பகுதிகளாகப் பிரித்தார். இது ஒரு வசதிக்காக என்றும் சொல்லிவிடுகிறார். அவர் பிரித்து வைத்தவை, Id, Ego மற்றும் Super Ego. இந்த மூன்று வகையான உள அமைப்புகளின் கட்டுப்பாட்டில் செயல்படும் இயக்க ஆற்றலே ஆளுமை.

Id

நிச்சயம் இதை ஐடி என்று படிக்க வேண்டாம். இது மெயில் ஐடி இல்லை. இதை இட் என்றே சொல்கிறார். ஆங்கிலத்திலேயே இதற்கு இணையான வார்த்தை ஒன்று இருக்கிறது. Instinct. இட் என்பது உணர்வுந்தல். ஒரு மனிதனின் ஆதார சக்தி, தேவை, உந்துதல் எல்லாமே இதுதான். தன்னை அறியாமலே உணர்ச்சி ஆவேசம் கொள்ளும் நிலைமையைத்தான் இட் குறிக்கிறது.

இது தனது சுய தேவையினை பூர்த்தி செய்து கொள்ளுதல். பகுத்தறிவற்ற தன்மை, திடீர் உணர்ச்சிகளுக்கு ஆட்படுதல். இந்த உணர்வுந்தல் என்பது இன்பக்கொள்கையின் அடிப்படையில் செயல்படுகிறது. இன்பத்தை நாடும் அனைத்து வகை உந்துதல்களுக்கும் கட்டுப்பாடின்றி தாராளமாக வெளிப்படுத்தப்படுகின்றது.

இட்-டின் முதன்மையான நோக்கம் உடனடி இன்பம்தான். பிறப்பின்போது குழந்தையிடம் அடிப்படை ஆளுமையாக இருப்பது இட் மட்டும்தான். இட்-டுக்கு நீதி தெறியெல்லாம் தெரியாது. எப்போதும் இன்பம்தான் இதற்கு ஒரே குறி. சொல்லப்போனால் மனத்தின் குரங்குத்தனமெல்லாம் இதிலிருந்துதான் வருகிறது.

இந்த உணர்வுந்தலில் இருந்தே Ego-வும் Super Ego-வும் பிற்காலத்தில் வளர்ச்சி அடைவதாகச் சொல்கிறார்.

Ego

மனசாட்சி போன்றது இந்த Ego. வெளியுலகத்துடன் மிகவும் கவனமாக செயல்படக்கூடியது. ஒரு காரியத்தை செய்யும்போது அந்த வேலையைச் செய்யலாமா? செய்யக்கூடாதா? என்று தர்க்க ரீதியாக சிந்திக்கக்கூடியது இந்த Ego.

Id அளிக்கும் சக்தியினை Ego சரியான வகையில் செயல்படுத்துவதால் மனித நடத்தையினை நெறிப்படுத்தும் செயலராக அமைந்தது Ego.

நாகரிக உணர்வின் அவசியத்தால் உண்டாக்கிய பண்பாட்டுணர்ச்சிதான் இந்த Ego. உடல் வேட்கைகளுக்கும் சமுதாயக் கட்டுப்பாடுகளுக்கும் இடையில் மனித நடத்தையை சமனப்படுத்தி வைப்பதுதான் இதன் வேலை. புத்திசாலித்தனம், ஒழுங்கு என்று சொல்லப்படும் வார்த்தைகள் பண்பாட்டுணர்ச்சியின் தன்மையே. அதிக இன்பம் குறைந்த துன்பம் என்ற நிலைப்பாட்டில் செயல்படுவதே இதன் செயல்முறை.

உண்மை நியதியின் அடிப்படையில் அறிவுப்பூர்வமாக செயலாற்றி, பல் உணர்வுத் தூண்டல்கள் மற்றும் அழிவுச் செயல்களைக் கட்டுப்படுத்தும் ஆளுமையின் ஒரு பகுதியே இந்த Ego. காரண-காரியத்தின் அடிப்படையில் செயல்படுவதே Ego.

Super Ego

இதை மனசாட்சி என்று சொல்லலாம். முன்னோர்கள் பெற்றோர்களிடமிருந்து கற்றுக் கொண்ட சரி; தப்பு, தர்ம; நியாய சட்டங்கள் எல்லாம் இதில் அடங்கும். இது நம் எல்லோருக்குள்ளும் இருக்கும் ஒரு போலிஸ்காரன். இதை அதி தன்முனைப்பு என்று சொல்லலாம்.

நெறிமுறையுடன் அமைந்த உயர்ந்த நிலை செயல்பாடே இந்த Super ego. ஒருவரின் நடத்தை சரியானதா தவறானதா என்பதை முடிவு செய்து அதற்கு ஏற்ப அவருடைய நடத்தையை சீர்படுத்தும் பணி Super ego-வுடையது.

Id என்பது இன்பத்தை நாடுவதிலும், Ego என்பது உண்மைநிலையினை ஆராய்வதிலும், Super ego என்பது சரியான செயல்பாட்டினை நாடுவதிலும் ஈடுபட்டு செயல்படுகின்றன. இந்த Super ego-வ்ன் முக்கிய பணிகள் மூன்று.

1. சமூகத்துக்குப் புறம்பான செயல்களில் Id ஈடுபடும்போது அதனைத் தடுப்பது
2. உண்மை நிலைக்கு பதில் நியாயமான குறிக்கோள்கள் செயல்பட Ego-வினைத் தூண்டுவது
3. எந்த ஒரு காரியத்தையும் சரியாகவும் முழுமையாகவும் செய்து முடிக்கும் வகையில் செயல்படுவது.

இப்படி மூன்று பகுதிகளாகப் பிரித்தாலும், ·பிராய்டு சொல்லும் ஆளுமை பருவ வளர்ச்சி என்பது முக்கியமானது.

ஒரு குழந்தை முதல் ஐந்து வருடத்துக்குள் பலவிதமான நிலைகளைக் கடக்கிறது. இந்த நிலைகள்தான் ஒருவரின் பின்னாளைய ஆளுமையைத் தீர்மானிக்கின்றன. இந்தக் கட்டங்களில் ஏதாவது தேக்கம் ஏற்பட்டால் அது ஆளுமைக் கோளாறைத் தோற்றுவிக்கும் என்று சொல்கிறார் ·பிராய்டு.

இந்த நிலைகளை அவர் பின்வருமாறு பிரித்தார்.

The oral stage
The anal stage
The phalic stage
The genital stage