Wednesday, November 9, 2011

எடுத்த காரியத்தில் வெற்றி பெற வேண்டுமா?


நாம் அனைவருமே எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றி பெற வேண்டும் என்றே விரும்புகிறோம். ஆனால், அனைவராலும் வெற்றி பெறமுடிவதில்லை. இந்த காரியத்தில் ஏன் என்னால் வெற்றி பெற இயலவில்லை என்று பலரும் யோசிப்பதில்லை; மாறாக, அவ்வளவு தான் என் விதி என்று விட்டுவிடுகிறோம். ஆசை மட்டும் இருந்தால் வெற்றி கிட்டாது. ஆசையுடன் சில செயல்களையும் மேற்கொண்டால் மட்டுமே வெற்றி கிட்டும். அதற்கு செய்ய வேண்டியன என்ன?
இதோ சில டிப்ஸ் உங்களுக்காக …
* நாம் எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றி பெற ஆசையுடன் விடாமுயற்சியும், நம்பிக்கையும் தேவை. அந்த நம்பிக்கை, “என்னால் நிச்சயம் இந்த காரியத்தை முடிக்க இயலும்’ என்ற மனஉறுதியுடன் அமைய வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே நீங்கள் திறமை உள்ளவராக இருந்தாலும் கூட உங்களால் வெற்றி பெற இயலும்.
* பிரச்னைகள் வரும் போது, நான் இவ்வளவுதான், இது என் விதி என்று மனம் தளரக் கூடாது. மாறாக, என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை இருக்க வேண்டும். அப்படி. நம்பினால், நீங்கள் புதியவனாக, புதியவளாக மாற முடியும். அந்த தன்னம்பிக்கை தோல்வியுறுபவர்களை, வெற்றியாளராக்கும்; சோம்பேறிகளை சுறுசுறுப்பானவர்களாக மாற்றும்.
* உங்கள் இலக்கை தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த இலக்கை பாசிடிவ் எண்ணங்களும், நம்பிக்கைகளும் சூழ்ந்திருக்க வேண்டும். பின், ஆக்கப்பூர்வமாக அதை தொடர்ந்து செய்யும் போது உங்களால் வெற்றி அடைய முடியும்.
* தன்னம்பிக்கையும் தைரியமும் நீங்கள் நினைக்கும் எண்ணங்களோடு இணைந்திருக்கும் போது உங்களுக்கு வெற்றி நிச்சயம். மாறாக, எதிர்மறையான (நெகடிவ்) எண்ணங்களை வளர்த்துக் கொண்டால், விளைவும் மோசமானதாகத்தான் இருக்கும். ஏனென்றால், <உங்கள் ஆழ்மனம், உங்கள் எண்ணங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்கிறது. ஆழ்மனதிற்கு நீங்கள் எதை அனுப்புகிறீர்களோ, அதையே உங்களுக்கு திருப்பி அனுப்புகிறது. உதாரணமாக, தாழ்வுணர்ச்சி, பயம் போன்றவற்றை நீங்கள் வளர்த்துக் கொள்ளும் போது, அது உங்கள் ஆழ்மனதினுள் சென்று அதையே திரும்ப அனுப்புகிறது. ஆக, நீங்கள் <உங்கள் மனதினுள் அனுப்புவதையே பெறுகிறீர்கள்.
எனவே, மனதை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அதில், ஆரோக்கியமான, ஆக்கப்பூர்வமான, தைரியமான எண்ணங்களால் நிரப்புங்கள். வெற்றி நிச்சயம்!

1 comment:

  1. Good.very nice blogs. I searched from this google. good service. articles on "the power of positive thinking" Napolean Hills, is good.

    ReplyDelete