Wednesday, February 19, 2014

கவலைகளின் பிடியில் சிக்கி கொள்ளாதீர்கள் !

*கவலை,பயம் என்னும் இருநாய்களுக்கும் உள்ளத்தை இரையாக்கி விடாதீர்கள். சந்தோஷமாகப் பாடிக்கொண்டே பணிகளைச் செய்யுங்கள்.

* பெரிய மனுஷத்தன்மைக்கும், உடல் உழைப்புக்கும் விரோதம் என்று நம்மவர்களில் சிலர் எண்ணிக் கொள்கின்றனர். சொற்ப பணக்காரன் கூட தனக்கொரு பணியாளை வைத்துக் கொண்டு பாயோடு கிடக்கும் கிழவி போல நடந்து கொள்கிறான். அவரவர் வேலையை அவரவர் செய்வதே சுகம்.
* எப்போதும் பாடுபட்டுக் கொண்டே இருங்கள். உழைப்பை விட சுகம் தரும் விஷயம் வேறொன்று கிடையாது.
* கடலின் ஆழத்தைக்கூட அளந்து பார்த்திருக்கின்றனர். ஆனால், உள்ளத்தின் ஆழத்தை அளப்பது அதை விட பலமடங்கு கஷ்டம். இருந்தாலும் சோர்ந்து போகாமல் உள்ளத்தை ஆராயுங்கள்.
* உள்ளத்தில் உறுதி, எப்போதும் மகிழ்ச்சி, நிர்வகிக்கும் ஆற்றல், தன்னம்பிக்கை, சரீர உழைப்பு முதலிய நல்ல குணங்களை மனதில் வளர்த்துக் கொள்வது மனித நேயத்தையும் எல்லையில்லா ஆனந்தத்தையும் தரும்

No comments:

Post a Comment