Showing posts with label நம்பிக்கை மேற்கோள்கள். Show all posts
Showing posts with label நம்பிக்கை மேற்கோள்கள். Show all posts

Wednesday, November 9, 2011

நம்பிக்கை மேற்கோள்கள்

நீங்கள் உங்களை நம்ப வேண்டும். அதுதான் வாழ்வின் ரகசியம். நான் அனாதை விடுதியில் இருந்த போதும், உணவுக்காக தெருக்களில் சுற்றித் திரிந்த போதும், என்னை நான் உலகின் மிகச் சிறந்த நடிகனாகவே எண்ணிக் கொள்வேன்" - சார்லி சாப்ளின்


*****

"திறமை, தைரியம் மற்றும் உழைப்பு இவைகளின் கூட்டுச்சேர்க்கையின் மூலமாக நிகழ்வதே அதிசயங்கள்" - பாப் ரிச்சர்ட்ஸ், ஒலிம்பிக் சாம்பியன்

*****

"நேற்றைய தோல்விகளே இன்றைய விதைகள். அவ்விதைகளை சரியான முறையில் பயிர் செய்வதன் மூலம் நாளைய வெற்றியை சிறந்த முறையில் அறுவடை செய்ய முடியும்" - பீடஜாப்ரா

*****

"மிகவும் எளிய முறையில் அமைதியான மனநிலையைப் பெற முடியும். எதற்காகவும் கவலைப்படாதீர்கள். அனைத்திற்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள்" - பெயர் தெரியாத ஓர் அறிஞர்

*****

"நீங்கள் உங்கள் மூதாதையர்கள் மற்றும் சக மனிதர்களைக் காட்டிலும் சிறப்பாகத் திகழ்வதை விட, உங்களை விட நீங்கள் சிறப்பாகத் திகழ முயற்சி செய்யுங்கள்" - வில்லியம் பால்க்னர்

*****

"நான் இன்று முழுமையாக சாதித்தவைகளைக் கண்டு ஆரம்ப நாட்களில் மரண பயம் கொண்டிருக்கிறேன்" - பெட்டி பென்டர்

*****

"நீங்கள் வெற்றி என்ற ஓர் இலக்கை அடைய பல முறை போராட வேண்டியிருக்கலாம்" - மார்க்ரெட் தாட்சர்

*****

"நன்மைகளைத் தேடுங்கள். அது உங்கள் சுற்றுப்புறத்தில் தான் உள்ளது. தேடுங்கள், கண்டறிந்த பின் அதை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். பிறகு நீங்களே அதில் நம்பிக்கை கொள்வீர்கள்" - ஜெ ஓவென்ஸ்

*****

"உற்சாகம் இருந்தால் எதையும் சாதிக்க முடியும். உற்சாகம் என்பது வானளாவிய எண்ணங்களை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை" - ஹென்ரி போர்டு